இலங்கைக்கு கடுமையான எச்சரிக்கை!..

இலங்கை அரசை சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளது.

வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களது நிலவுரிமையை இன்னும் அரசாங்கம் முழுமையாக சீரமைக்கவில்லை என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை ஒன்றின் ஊடாக குற்றம் சுமத்தியுள்ளது.

2015ம் ஆண்டு புதிய அரசாங்கம் பதவி ஏற்றதன் பின்னரும், தேசிய பாதுகாப்பை மையப்படுத்தியும், வெளிப்படைத் தன்மை அற்ற செயற்பாடுகள் இல்லாமையாலும், இந்த பணிகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.

‘எங்களால் ஏன் வீடு செல்ல முடியாது, இலங்கையில் இராணுவத்தின் காணி சுவீகரிப்பு’ என்ற பெயரில் 80 பக்க அறிக்கை ஒன்றை மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது.

இதில், காணி விடுவிப்பு விடயங்களில் வெளிப்படைத் தன்மை இல்லாமை, உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமை, சுவீகரிக்கப்பட்ட காணிகளது தரவுகள் இல்லாமை, பாதிக்கப்பட்ட சமுகத்துக்கு ஒத்துழைப்பு வழங்காமை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டயீட்டை வழங்க பாரிய காலத் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளமை போன்ற விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அத்துடன் சுவீகரிக்கப்பட்ட காணிகள் பல, இராணுவத்தினரால் தேசிய பாதுகாப்பு தேவைக்காக அன்றி, வர்த்தக நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-athirvu.in

TAGS: