யாழ்ப்பாணத்தில் எலும்புக்கூடுகள் மீட்பு ! அதிர்ச்சியில் மக்கள்

அச்சுவேலிப் பகுதியில் மின் கம்பம் நாட்டுவதற்கு நிலத்தைத் தோண்டியபோது மனிதஎலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டமையால் அப் பகுதியில் நேற்றுப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அச்சுவேலி, பத்தமேனி சூசையப்பர் வீதியில் இலங்கை மின்சாரசபையினர் மின் கம்பமொன்றை நாட்டுவதற்காக நேற்று நிலத்தைத் தோண்டினர். இதன் போது நிலத்துக்குள் இருந்து மண்டையோடு, கை, கால்கள் உள்ளிட்ட எலும்புக் கூட்டுப் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்தப் பிரதேசத்தில் முன்னர் யுத்தம் நடைபெற்றுள்ளதாகவும், அதன் பின்னர் இப்பகுதிமுழுவதும் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

-eelamnews.co.uk

TAGS: