முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட சமுர்த்தி வங்கிகளில் பாரிய மோசடிகள் இனம் காணப்பட்டும் இது தொடர்பான பாராபட்சமான போக்கில் மோலதிகாரிகள் இருப்பது கவலைக்குரிய விடயமாக உள்ளது.
அந்த அடிப்படையில் நமக்கு கிடைத்த தகவல்களின்படி கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட சமுர்த்தி வங்கிகளில் பணியாற்றும் ஜேசப் ஜேயிஸ்குமார் என்பவர் கடந்த காலத்தில் பொதுமக்களை ஏமாற்றி அவர்களின் பெயரில் சமுர்த்தி வங்கியில் கடன் பெற்றுள்ளார்.
பயனாளிகளுக்கு தெரியாது அவர்களின் பெயரில் மேற்கெள்ளப்பட்ட ஓர் மோசடியாகும். இதற்காக இவருடைய சம்பள ஏற்றம் கடந்த வருடத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருப்பதும் தெரிய வருகிறது. கணக்காய்வு நடைவடிக்கைகள் இடம்பொற்றும் இதுவரைக்கும் பொதுமக்கள் பணம் செலுத்தப்படாது அவர்கள் கடனாளிகளாகவே ஏமாற்றப்படுகின்றனர்.
இதேவேளை முகமட் சியாம் என்பவர் பொதுமக்களின் பணத்தில் ஒரு இலட்சத்து ஜம்பதாயிரம் ரூபாய் பணம் மோசடி செய்தது கணக்காய்வு மூலம் உறுதி செய்யப்பட்டும் இதுவரை எந்த ஒழுக்காற்று நடைமுறைகளும் கையாளப்படாது இருப்பதுடன் மேலதிகாரிகள் பாராமுகமாக செயற்பாடுகின்றனர்.
இதற்கு காரணம் இவர் வடமாகாணசபை உறுப்பினர் ஜாவாகிர் என்பவரது மருமகன் என்பதனால் என்றும் மக்கள் கூறுகின்றனர். இவரே கடந்த வருடம் சமூகவலைத்தளத்தில் முல்லைத்தீவை முஸ்ஸிம் தீவாக மாற்றிக்காட்டுவோம் என கூறி பிரபலமனவர். இதேபோன்று ஜேசப் ஜேயிஸ்குமார் என்பவர் வன்னியின் தற்பேதைய அமைச்சர் றிசாட் பதூர்தீன் அவர்களின் இனைப்பாளர் என தன்னை அடையாளப்படுத்துபவராகும் இவர்கள் அரசியல் பின்னனிகளை வைத்து ஏழை மக்களின் வாழ்வுக்காய் வழங்கும் பணத்தை கெள்ளையடிக்கலாமா இதை தட்டிக்கேட்பது யார்?
ஆனால் தகவலறியும் சட்டம் மூலம் கேட்கலாம் கேட்கவேண்டிய முகவரி
பிரதேச செயலாளர்
பிரதேச செயலகம்
கரைதுறைப்பற்று
அல்லது
மாவட்ட செயலாளர்
மாவட்ட செயலகம்
முல்லைத்தீவு
-http://eelamnews.co.uk