மன்னார் புதைகுழி எலும்புக்கூடு மாதிரிகளை அமெரிக்காவுக்கு அனுப்ப நீதிமன்றம் அனுமதி

மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டுள்ள 185 எலும்புக்கூடுகளின் மாதிரிகளை அமெரிக்காவுக்கு அனுப்பி ஆய்வு கூடப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு, மன்னார் நீதிமன்ற நீதிவான் அனுமதி அளித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் இதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியதாக, மன்னார் புதைகுழி அகழ்வுக்குப் பொறுப்பான சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்ட துல்லியமான காலப்பகுதியை கண்டறிவதற்கான ஆய்வுக்காகவே இவற்றின் மாதிரிகளை அமெரிக்காவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவரையில், 185 எலும்புக்கூடுகள் இந்தப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

இவற்றில் 179 எலும்புக்கூடுகள் முழுமையாக அகற்றப்பட்டு, பொதியிடப்பட்டு பாதுகாப்பாக நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளன.” என்றும் அவர் தெரிவித்தார்.

-puthinappalakai.net

TAGS: