தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்படுவோர் மற்றும் வெளியேறுவோர் தமக்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக வடக்கு மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வடக்கு மாகாண முதலமைச்சர் வெளியேறலாம் என ஊகங்கள் வெளியிடப்பட்டுவரும் நிலையில் அவர் இந்த கருத்தைக் கூறியுள்ளார்.
வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் எனும் பெயரில் புதிய கட்சியொன்றை இன்று ஆரம்பித்துள்ளார்.
இந்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வும் கொள்கைப் பிரகடன வெளியிடும் நிகழ்வும் யாழ். ஆஸ்பத்திரி வீதியில் உள்ள ஹோட்டலில் இன்று முற்பகல் நடைபெற்றது.
மதத் தலைவர்களின் ஆசியுரையுடன் கட்சியின் செயலாளர் நாயகமாக செயற்படும் அனந்தி சசிதரனால் கொள்கைப் பிரகடனமும் செய்து வைக்கப்பட்டுள்ளது.
தனது தலைமையின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவோருக்கான தளமாக தமது கட்சி இருக்கும் என கூறியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிபீடமேறி மூன்ற வருடங்கள் சென்றுள்ள போதிலும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுத்தரவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தினார்.
-athirvu.in