வடக்கு மாகாண சபையின் காலம் இன்று (புதன்கிழமை) நள்ளிரவுடன் நிறைவடைய இருக்கின்ற நிலையில் சபையின் இறுதி அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
யாழ்ப்பாணம் – கைதடியிலுள்ள மாகாண சபை செயலக சபா மண்டபத்தில் சபைத் தலைவர் சீ. வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று காலை 9.30 அளவில் அமர்வு ஆரம்பமானது.
கடந்த 25.10.2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இச்சபையின் ஐந்தாண்டு காலத்தின் இறுதி அமர்வு நேற்று நடைபெற்றது.
சபை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் தற்போது ஐந்தாண்டு வரையான காலத்திற்குள் 134 அமர்வுகள் நடாத்தி முடிக்கப்பட்டிருக்கின்றன.
சபையின் இறுதி அமர்வான நேறைய தினமே சபையில் முதலாவது விடயமாக சபைக்கான கீதம் முன்மொழியப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளது.
பொதுவாக முதலமைச்சர் உட்பட உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களைச் சொல்வதற்கு இறுதியாக அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும்.
அதற்கமைய போதுமானவரை நேரக் கட்டுப்பாட்டோடு அனைவரதும் செயற்பாடுகள் அங்கீகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-athirvu.in