சிறிலங்காவின் தேசியஅரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு விலகியதையடுத்து இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது இதனையடுத்து இன்று முன்னாள் அரசதலைவா மகிந்த ராஜபக்ச பிரதமாராக பொறுப்பேற்றுள்ளார்.
சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அந்தப் பதவியில் இருந்து அகற்றவிட்டு தற்காக மஹிந்தவை நியமிப்பது தொடர்பில் சிறிலங்காவின் தற்போதைய அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவிற்கும் – மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் கடந்த சில வாரங்களாக ரகசிய பேச்சுக்கள் இடம்பெற்றுவந்த நிலையிலேயே இந்தப் பதவிப் பிரமாணம் இடம்பெற்றிருக்கின்றது.
கொழும்பு காலிமுகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு இன்றைய தினம் சென்றிருந்த முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவுடன் நீண்ட நேர கலந்துரையாடலை நடத்திய நிலையில் சற்று நேரத்திற்கு முன்னதாக பிரதமராக பதவியேற்றுக்கொண்டிருக்கின்றார்.
இதன் பின்னணியில் இந்தியா உள்ளது எனக் கூறப்படுகிறது. ஏன் எனில் ரணில் விக்கிரமசிங்க அமெரிக்காவின் வாலைப் பிடித்து தொங்கிக் கொண்டு இருப்பதை இந்தியா விரும்பவில்லை. இன்னும் சில மாதங்களில் அமெரிக்க கூட்டுப் படை இந்தியப் பெருங்கடலில் இலங்கையோடு இணைந்து பெரும் போர் ஒத்திகை ஒன்றை நடத்த இருந்தது. அதற்க்கும் தற்போது முற்றுப் புள்ளிவைத்துள்ளது மோடியின் அரசு என்கிறார்கள் விடையம் அறிந்தவர்கள்.
-athirvu.in