சிறிலங்கா நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்கா அரச தலைவரை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஒக்டோபர் முப்பதாம் திகதியான இன்றைய தினம் விடுத்துள்ள விசேட அறிக்கையொன்றில் சிறிலங்காவில் திடீரென ஏற்படுத்தப்பட்டிருக்கும் அரசியல் ஸ்திரமற்ற நிலைமை குழப்பங்கள் காரணமாக நாடு பாரிய அச்சுறுத்தலுக்கு தளப்பட்டுள்ளதாக மேற்படி ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.
இதனால் நாட்டின் அரசியல் சாசனத்திற்கு உடபட்டு சுமூகமான தீர்வொன்றை காண்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மெற்கொள்ளுமாறு சிறிலங்கா அரசதலைவரைக் கேட்டுக்கொள்வதாகவும் ஒன்றியம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் நேற்றிய தினம் சிறிலங்கா அரசதலைவரை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியபோதும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் இந்த விடயத்தை சிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காப்ட்டபட்டுள்ளது.
இலங்கையில் வாழும் அனைத்து மக்களினதும் நலனுக்காக நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் பெற்றுக்கொடுக்கவும் ஒன்றியம் தயாராக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-http://eelamnews.co.uk