அடுத்து என்ன நடக்கும்? ரணிலால் என்னதான் முடியும்?

இலங்கை அரசியலில் அடுத்து என்ன என்கின்ற கேள்வி அனைவர் மனங்களிலும் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

ரனில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார்… ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரனையை கொண்டுவந்து அவரை பதவியில் இருந்து அகற்றுவார்.. மக்கள் எழுச்சி ஒன்றை ஏற்படுத்தி மாற்றத்தைக் கொண்டுவருவார்.. இப்படி பல நம்பிக்கை பேச்சுக்கள் மக்கள் மத்தியில் உலவந்துகொண்டிருக்கின்றன.

ஆனால், யதார்த்தத்தில் இவை எதுவுமே நடைபெறுவதற்கு சாத்தியம் இல்லை என்றே களத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரனிலின் கை ஜனநாயரீதியாக சற்று ஓங்கினால்கூட, அடுத்த கனமே நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்துவிடலாம்.

நொவெம்பர் 16ம் திகதிவரை தற்பொழுது ஒத்திவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை, அதற்கு முன்னரே கலைத்துவிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது.

ஒரு வேளை நொவெம்பர் 16ம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படுகின்ற போது மிரட்டல்கள், பேரம்பேசல்கள் என்று நடைபெற்று ரனிலின் பக்கம் 150 அல்ல 200 நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் சென்றாலும் கூட,ரனில் ஆட்சி அமைக்க ஜனாதிபதி இனி அனுமதிக்கப்போவதில்லை. ஜனாதிபதிக்கிருக்கு இருக்கின்ற அதி உச்ச அதிகாரத்தைப் பாவித்து ஒரு நொடியில் அவரால் ஆட்சியைக் கலைத்துவிட முடியும். முதலில் நடாளுமன்றத்தை ஒத்திவைக்கலாம். பின்னர் கலைக்கலாம்.

மீண்டும் தேர்தல் என்றுவருகின்ற பொழுது, தென் இலங்கை மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு உள்ளவர் என்று உள்ளூராட்சி சபைத் தேரதல்கள் ஊடாக நிரூபிக்கப்பட்ட மகிந்தவே பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கட்டில் ஏறுவதற்குச் சந்தர்ப்பம் இருக்கின்றது.

ஊடகப்பரப்பில் பேசப்படுவதுபோன்று ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரனையை ரனில் தரப்பு கொண்டுவருவதும் இலகுவான ஒரு காரியம் இல்லை.

ஜனாதிபதியை பதவி நீக்குவதாக இருந்தால்……

1 113 பேர் கையொப்பமிட்டு பிரேரணை சமர்பிக்கப்படும் சபாநாயகரிடம்

2) சபாநாயகர் அதை ஏற்றுக் கொண்டால்

3) மீண்டும் வாக்கெடுப்பில் 150 பேர் ஆமோதிக்க வேண்டும்

4) பின்னர் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு கொடுக்கப்படும்

5) நீதிமன்றம் குற்றம் என கண்டால்

6) அதை சபாநாயகருக்கு அறிவிக்கும்

7) சபாநாயகர் மீண்டும் வாக்கெடுப்பிற்கு விட வேண்டும்

8) அதில் 150 பேர் எதிராக வாக்களித்தால் மாத்திரமே நம்பிக்கை இல்லாப் பிரேரனை நிறைவேறும்.

தற்பொழுது உள்ள சூம்நிலையில் இதற்கு சாத்தியம் மிக மிக மிகக் குறைவு என்றுதான் கூறவேண்டும்.

மக்களை நெருவில் இறக்கி ஏதாவது செய்ய முயற்சிப்பார்களா?

ரனில் ஒரு மக்கள் தலைவன் அல்ல. மேல்தட்டு வாழ்க்கை வாழும் ரனிலால் வீதிகளில் இறங்கி மக்களைத் திரட்டும் வல்லமை இல்லை.

ஜனாதிபதியிடம் இருக்கும் அளவற்ற அதிகாரம், பாதுகாப்பு கட்டமைப்புக்களைப்; பாவித்து இலகுவாகவே கிள்ளி எறிந்துவிடுவார்கள்.

வல்லரசு தேசங்களின் பலமான அழுத்தங்கள் அல்லது நேரடித் தலையீடுகள் ஏற்படாதபட்சத்தில், இந்த இழுபறியில் ரனிலால் வெற்றிபெறுவதென்பது கடிமானதாகவே இருக்கும்.

(நன்றி – குமரன்)

-http://eelamnews.co.uk

TAGS: