நான் இருக்கும்வரை வடக்கு, கிழக்கை இணைக்க விடமாட்டேன், சமஷ்டி தீர்வையும் அளிக்கமாட்டேன் – இவ்வாறு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
இந்த இரண்டு விடயங்களையும் அமுல்படுத்துவதானால் தன்னை கொலை செய்த பின்னரேயாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கும், கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று பிற்பகலில் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சிலர் அரசாங்கம் சமஸ்டி தீர்வையும், வடக்கு கிழக்கு இணைப்பையும் வழங்க தயாராகவிருப்பதாக தெரிவித்து வருவது குறித்து தனக்கு அறியக்கிடைத்ததாக ஜனாதிபதி சிறிசேன குறிப்பிட்டார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் தானும் மிகுந்த அவதானத்துடனும் புரிந்துணர்வுடனும் செயற்பட்டு வருவதாகவும், அடுத்துவரும் நாட்களில் இருவரும் கலந்துரையாடிய தீர்மானங்களாகவே மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
-athirvu.in