மஹிந்தவின் வரவு; தமிழ் மக்கள் மீது அமெரிக்காவிற்கு திடீர் அக்கறை!

இலங்கையில் அடுத்த பிரதமர் யார் என்பதை அந்த நாட்டின் நாடாளுமன்றமே தீர்மானிக்கவேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க ராஜாங்க திணைக்கள பேச்சாளர் ரொபட் பல்லாடினோ இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் என்ற அமெரிக்காவின் வெளிநாடுகளுக்கான நிறுவகம், இலங்கையில் அரசியல் பிரச்சினை ஜனநாயக ரீதியில் தீர்க்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க ஜனநாயகக்கட்சியின் உயர் பிரமுகரான வேமொன்ட்டின் செனட்டர் பெற்றிக் லெஹி, தமது பதிவில் மகிந்த ராஜபக்ச இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டமையானது, இலங்கை அரசாங்கமானது, குற்றவாளிகளின் இருப்பிடமாக மாறும் என்பதை கட்டியம் கூறுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச சீனாவுடன் இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கையானது, தமிழ் சிறுபான்மையினருக்கும், எதிர் அரசியல் செய்வோருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் பிழையான நோக்கத்தை கொண்டு சேர்க்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-athirvu.in

TAGS: