பெல்ட்டி அடித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ! பிரதி அமைச்சராக நியமனம் ! சிதையும் தமிழ் தேசியம் ! யார் அந்த கறுப்பாடு ?

தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் வியாழேந்திரன் மகிந்தவின் அரசில் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் .

கிழக்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சராக சற்று முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார் .தமிழ் தேசிய கூட்டமைப்பின் வரலாற்றில் முதல்முறையாக அமைச்சராக ஒருவர் பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது .

தமிழ் இனத்தை அழித்த இன அழிப்பின் சூத்திரதாரி மகிந்தவின் அரசாங்கத்தில் தமிழ் தேசியம் பற்றி கதைக்கும் கூட்டமைப்பின் உறுப்பினர் அமைச்சு பதவியை ஏற்றுக்கொண்டுள்ளமை தமிழ் தேசியத்தினை அவமதிக்கும் செயல் .

இதுவரை காலமும் தமிழ் தேசிய போர்வைக்குள் ஒளிந்திருந்த கறுப்பாடு இன்று வெளியே வந்துள்ளது .இன்னும் எத்தனை கறுப்பாடுகள் ஒளிந்திருக்கின்றன என்பதனை காலம் வெளிக்காட்டும் .

-eelamnews.co.uk

TAGS: