சிறிலங்கா அரச தலைவரினால் கலைக்கப்பட்டிருந்த நாடாளுமன்றம் நாளைய (14.11.2018) தினம் கூட்டப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று திட்டவடடமாக அறிவித்துள்ளனர்.
இதற்கமைய நாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப்பட்டதும் மீ்ண்டும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கி, ஆட்சியமைப்போம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சூளுரைத்துள்ளார்.
உச்ச நீதிமன்றின் தீர்ப்பின் மூலம் சிறிலங்காவில் சட்டத்தின் ஆட்சியும், நீதிமன்றின் சுயாதீனத் தன்மையும் தொடர்ந்தும் நிலைநாட்டப்பட்டிருக்கின்றது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சர்வாதிகாரத்தை நோக்கிய பயணத்தை முடிவுக்கு கொண்டுவந்திருப்பதாகவும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய மஹிந்தவை பிரதமராக்கி சட்டவிரோதமான அமைத்த அரசாங்கத்தை நாளைய தினத்துடன் தூக்கி எறியவுள்ளதாகவும் ராஜித்த சுட்டிக்காட்டியுள்ளார்.
-athirvu.in