சிறிலங்காவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்தராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராக நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டநம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி அரச தலைவர்மைத்ரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் மஹிந்த அரசாங்கம் பெரும்பான்மைபலத்தை நிரூபிக்கத் தவறிவிட்டதாக கூறி சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்திருந்தகடிதத்திற்கு பதில் அளிக்கும் வகையில் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே சிறிலங்காஅரச தலைவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
சிறிலங்கா நாடாளுமன்றம் இன்றைய தினம் சபாநாயகர் கரு ஜயசூரியவினால்கூடட்ப்பட்டபோது பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராகஜே.வி.பி நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை கொண்டுவந்திருந்தது.
இதற்கு மஹிந்த தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திகூச்சல் குழப்பத்திலும் அவையில் ஈடுபட்டிருந்தனர். எனினும் வாய்மூல வாக்கெடுப்பைநடத்தி நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் எடுக்கப்பட்டமுடிவுகளை சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதிக்க கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருந்தநிலையில், சற்று முன்னர் ஜனாதிபதி சபாநாயகருக்க பதில் கடிதமொன்றைஅனுப்பிவைத்துள்ளார்.
-athirvu.in