தற்போதைய அரசியல் சூழ்நிலை பெரும்பான்மை சமூகத்துடன் இணைந்து வாழ முடியாது என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் வடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம் எனவும முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்குள் நேற்று (வியாழக்கிழமை) நிலவிய குழப்பகரமான சூழல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”1987ஆம் ஆண்டில் வடக்கு- கிழக்கு தமிழ் மாநிலம் உருவாகுவதற்கான சூழல் நிலவியபோது அது தமிழீழ விடுதலைப் புலிகளினால் தடுக்கப்பட்டது.
ஆனால், அவர்கள் அன்று அதனை தடுத்திருக்காவிடின் தமிழ் மாநிலம் உருவாகியிருக்கும். அவ்வாறு தமிழ் மாநிலம் உருவாகியிருந்தால் தற்போது நிலவும் அரசியல் குழுப்பங்களுக்கு மத்தியில் அதனை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கக்கூடும்.
தற்போதைய அரசியல் சூழல் பெரும்பான்மையினத்தவருடன் இணைந்து வாழ முடியாது என்ற அளவிற்கு மோசமான நிலையில் காணப்படுகிறது.
கண்ணுக்கு தெரிகின்ற அளவில் எமக்கு பெரும்பான்மை காணப்படுகின்றது. ஆனால், அதனை ஏற்றுக் கொள்வதற்கு எவரும் தயாராக இல்லை” எனத் தெரிவித்தார்.
-eelamnews.co.uk