மகிந்த நாடாளுமன்றத்தால் விலக்கப்பட்டார்! சம்பந்தன் விசேட அறிவிப்பு

நாடாளுமன்றின் தீர்மானத்திற்கு அமைய மகிந்த ராஜபக்ச பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார்.

எனவே அவர் பதவியில் நீடிப்பதற்கு எவ்வித உரிமையும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்த நிலையில் அங்கிருந்து வெளியேறிய போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,

கடந்த மாதம் பதவியேற்ற புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் மகிந்த ராஜபக்ச பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளதுடன், புதிய அமைச்சர்களும் பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

-eelamnews.co.uk

TAGS: