தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு பத்தாண்டுகள் அண்மிக்கப்படும் காலத்தில், சிங்களப் பேரினவாத அரசு நன்றாக உலகின் முன் அம்பலப்பட்டு வருகின்றது. முதலில் சிங்களவர்களுக்கும் ஜனநாயகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இலங்கையின் இன்றைய நிகழ்வுகள் உலகிற்கு எடுத்துக் காட்டுவதே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தையும் உணர்த்தி நிற்கிறது.
மக்களால் தெரியு செய்யப்பட்ட பிரதமர் ஒருவர் இருக்கும்போது, ஜனாதிபதி இன்னொரு பிரதமரை நியமித்தார். உலகில் இரண்டு பிரதமர்கள் உள்ள நாடு ஸ்ரீலங்கா என்று உலகமே பேசுகிறது. மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை விட மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார். சிறுவன் ஒருவன் இந்தக் கதிரையை விட்டு எழும்ப மாட்டேன் என்றும் இந்த இனிப்பு எனக்கு வேண்டும் என்றும் அடம் பிடிப்பதைப் போல மகிந்த ராஜபக்ச அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார்.
ஸ்ரீலங்கா வரலாற்றில் பல தடைவைகள் ஜனாதிபதியாக இருந்து, பிரதமராக இருந்து, விடுதலைப் புலிகளை அழித்த வீரன் என்று மார்தட்டிக் கொள்ளும் ராஜபக்ச சின்னப் பிள்ளையாகி விட்டார். உலகின் முன்னால் கடுமையாக அசிங்கப்பட்டு விட்டார். ராஜபக்சக்களை கொன்றிருந்தால்கூட பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு நிலமை மாறிவிட்டது. உயிரோடு மிகுந்த அவமானத்திற்கு ராஜபக்ச உள்ளாகிக் கொண்டிருக்கிறார்.
அண்மையில் பாராளுமன்றத்திற்கு வந்த ராஜபக்ச நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதையடுத்து பின் கதவால் ஓடினார். அவமானம், அச்சம், பீதி அவர் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. தமிழர்களை அழித்த ராஜபக்சவுக்கு இதுபோதும். இத்தனை அவமானங்கள் நிறைந்த வாழ்வு தேவைதானா? இன்னமும் அதிகார மோகமும் பசியும் எடுத்து நான் தான் பிரதமர் என்னை பதவியில் இருந்து அகற்ற முடியாது என்று ராஜபக்ச சொல்லுகிறார்.
அண்மையில் இலங்கைப் பாராளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் சிங்கள இனவாத ரவுடிகளின் முகத்தை உலகிற்கு அம்பலம் செய்துள்ளது. அவர்கள் எவ்வளவு கொடுமையானவர்கள்? ஜனநாயக இடமான பாராளுமன்றத்தில் இப்படி நடக்கும் சிங்கள இனவாதிகள், காடையர்கள், தமிழர்களை எப்படி இனவேட்டையாடி இருப்பார்கள் என்பதை உலகம் விளங்கியிருக்கும். சக பாராளுமன்ற உறுப்பினர்கள்மீதே இப்படி வன்முறையை பிரயோகிப்பவர்கள் தமிழர்கள்மீது எப்படி வன்முறை செய்வார்கள்? இப்படிப்பட்ட சிங்கள பாராளுமன்றத்தில் எதனையும் பேசித் தீர்க்க முடியாது என்பதே தமிழீழமே ஒரே தீர்வு என்பதை வலியுறுத்துகிறது.
உண்மையில் சிங்கள இனவாதக் காடையர்களுக்கு பாராளுமன்றம் தேவையில்லை. இவர்களுக்கும் ஜனநாயகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இவர்களிடம் ஜனநாயக வழியில் உரிமையை பெற முடியாது என்பதால் தான் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தினர். தலைவர் பிரபாகரன் ஆயுதம் வழி சிங்களத்திற்கு அடி கொடுத்தார். அந்த அடிக்குத்தான் சிங்களம் அஞ்சியது. நடுங்கியது. அந்த அடியில்தான் வழிக்கு வந்தது. இவர்களுடன் ஜனநாயக வழியில் பேச பலனில்லை.
ஸ்ரீலங்கா அரசை உலக நாடுகள் கடுமையாக எச்சரித்து வருகின்றன. அமெரிக்கா, யப்பான், இந்தியா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகள் ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளது. பாராளுமன்றத்தை ஸ்ரீலங்கா கேலிக் கூத்தாக்கியுள்ளதாகவும் மக்கள் பிரதிநிதிகளை மக்கள் தண்டிக்க வேண்டும் என்றுதம் பிரிட்டன் சொல்லியிருக்கிறது.
ஸ்ரீலங்கா பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வாறு நடக்க வேண்டும்? எவ்வாறு கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்று பாடம் கற்பிக்க தயாரதாக இருப்பதாக ஸ்ரீலங்கா இளைஞர் பாராளுமன்றம் தெரிவித்துள்ளது. நிச்சயமாக மகிந்த ராஜபக்சவையும் ஐக்கிய தேசியக் கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்களையும் டக்ளஸையும் இளைஞர் பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். அங்கே அந்த சிறுவர்கள் எவ்வாறு சக பிரதிநிதிகளை மதிக்கிறார்கள்? தமது கருத்துக்களை எவ்வாறு முன் வைக்கிறார்கள் என்பதை பார்க்கட்டும்.
கத்திகளுடன் பாராளுமன்றத்திற்குள் சண்டை செய்கிறார்கள். மிளகாய் பொடியை கரைத்து வீசுகிறார்கள். உலகில் மிகவும் சிரிப்புக்குரிய நாடாக இலங்கை மாறிவிட்டது. மைத்திரி என்ற காமடி ஜனாதிபதியினால்தான் இலங்கைக்கு இந்த நிலமை. பைத்தியக்காரன் ஒருவன் ஜனாதிபதியானால் இலங்கையின் நிலமை மோசமாகும். அவன் நிறைவேற்று அதிகாரத்தை பிழையாக உபயோகிப்பான் என்று அன்று என்.எம். பெரேரா கூறியிருந்தார்.
1978இல் அவர் இவ்வாறு கூறியிருக்க, 40 ஆண்டுகளின் பின்னர் மைத்திரி என்ற பைத்தியத்திடம் நாடு சிக்கியிருக்கிறது. பைத்தியக்கார மைத்திரியின் நாடகங்கள் ராஜபக்சவை காப்பாற்றத்தான். ஆனால் மைத்திரியை வெறும் பைதியமாக கடந்துவிட இயலாது. அவர் ராஜபக்சவின் கடும் ஆதரவாளன். இனப்படுகொலை போர்க்குற்றத்திலிருந்து மகிந்தவை காப்பாற்ற நகர்வுகளை முன்னெடுத்தவர். இப்போது அதுவே வெளிச்சமாகியுள்ளது.
சிங்களவர்களின் கையில் ஜனநாயகம் என்பது கேலிக்கையானது. சிங்களவர்களுடன் இணைந்து வாழ முடியாது. அவர்கள் அதிகார மோகம் பிடித்தவர்கள். அடிப்படையில் மனித தன்மை அற்றவர்கள். சிங்களப் பேரினவாத்திடம் சிக்கிய தமிழீழத்தை மீட்க வேண்டும். அதுவே ஈழத் தமிழர்கள் நிம்மதியாக உகந்த வழி. தம் இனம் மீதே மிளகாய் பொடி வீசும் சிங்களவர்கள் தமிழர்கள்மீது எப்படி கொத்துக் குண்டுகளை வீசியிருப்பார்கள்?
-eelamnews.co.uk