மஹிந்தவிற்கு எதிராக சம்மந்தன், மனோ எடுத்துள்ள அதிரடி முடிவு!

மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வலியுறுத்தவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்க இடமளிக்கப் போவதில்லை என மைத்திரிபால சிறிசேன வலியுறுத்திவரும் நிலையில் சர்வ கட்சி சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த சந்திப்பை மக்கள் விடுதலை முன்னணி நிராகரித்துள்ளதுடன், சபாநாயகரும் இந்த சந்திப்பில் தாம் கலந்துகொள்ளப் போவதில்லை என அறிவித்திருக்கின்றார்.

ஏற்கனவே ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பில் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க போவதில்லை என்ற தீர்மானத்தில் தளர்வுப் போக்குடன் செயற்படுமாறு இரா.சம்பந்தன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்சின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும் மைத்திரிபால சிறிசேன தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காத நிலையில், மீண்டும் இன்று சர்வ கட்சித் தலைவர்களின் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இதேவேளை அனைத்து கட்சி கூட்டத்தில் தாமும் கலந்துகொள்ளப் போவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும் அறிவித்துள்ளார்.

தேசிய நெருக்கடியை தீர்க்கும் அனைத்தும் வழிமுறைகளையும் ஆராயும் எம் கொள்கையின்படி தமிழ் முற்போக்கு கூட்டணி இன்றைய அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் என தனது டுவிட்டர் பதிவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

-athirvu.in

TAGS: