மாவீரர்களை நினைவுகூர அச்சம் இன்றி வாரீர்! ஏற்பாட்டு குழு அழைப்பு!!

மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற நிலையில், மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் அச்சமின்றி அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என அம்பாறை கஞ்சிககுடிச்சாறு மாவீரர் தூயிலும் இல்ல நினைவேந்தல் ஏற்பாட்டு குழு அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த காலங்களில் நினைவேந்தல் நிகழ்வுகளில் அரசியல் தலையீடுகள் காணப்பட்ட நிலையில், இம்முறை நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தாமே முழுப் பொறுப்பு வகிப்பதாகவும் ஏற்பாட்டு குழு கூறியுள்ளது.

அம்பாறை கஞ்சிகுடியாறு துயிலும் இல்லத்தில் 1990 ஆம் ஆண்டு தொடக்கம் மாவீரர் தினத்தில் நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்று வந்தததுடன், இறுதியாக 2006 ஆம் ஆண்டு இந்த நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

எனினும் யுத்தம் காரணமாக தடைப்பட்டிருந்த கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் கடந்த வருடம் முதல் தடவையாக மாவீரர்களின் பெற்றோர்களால் நினைவுகூரப்பட்டிருந்தது.

இம்முறையும் எழுச்சியாக எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வினை நடத்தவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக மாவீரர் பணிக்குழு கூறியுள்ளது.

இதனடிப்படையில் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இருந்து அனுமதிகள் பெறப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து வசதிகள் குடிநீர், உணவு போன்ற அனைத்து எற்பாடுகளும் மாவீரர் பணிக்குழுவின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த நினைவேந்தலை நினைவுகூறுவதற்கு அழைப்பு விடுக்கும் வகையில் உடகவியலாளர் சந்திப்பு ஒன்று அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

இந்த ஊடக சந்திப்பில் மாவீரர்களின் பெற்றோர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த மாவீரர் பணிக்குழுவின் ஏற்பாட்டாளரான குட்டிமணி மாஸ்டர் எனப்படும் நாகமணி கிருஸ்ணபிள்ளை, அச்சமின்றி அனைவரும் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

-eelamnews.co.uk

TAGS: