நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர் எண்ணிக்கை தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற வாக்கெடுப்பின் போது, மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் கட்சி தோல்வி கண்டுள்ளது.121 – 0 என்ற பெரும்பான்மையில் வாக்கெடுப்பு வெற்றி பெறற்தாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
யோசனையை சமர்ப்பித்த ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன ஆதரவாக 121 வாக்குகளை வழங்கின. எனினும், மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அரசாங்கக்கட்சியான பொதுஜன ஐக்கிய முன்னணியின் 7 பேரை பெயரிட்டிருந்தது. எனினும், அதற்கு 5 உறுப்பினர்களையே ஒதுக்க முடியும் என்று சபாநாயகர் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், அதனை ஆட்சேபித்து ஆளும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.தெரிவு குழு உறுப்பிர்களை தெரிவு செய்யும் வாக்கெடுப்பினை சபாநாயகர் இலத்திரனியல் முறையில் மேற்கொண்டார்.
அந்த வாக்கெடுப்பிற்கமைய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 121 வாக்குகள் ஆதரவாக கிடைத்துள்ளதென சபாநாயகர் அறிவித்துள்ளார்.
-eelamnews.co.uk