மாவீரர் நினைவேந்தலுக்கு எதிர்ப்பு இல்லை; யாழ் பொலிஸார் அதிரடி!

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில் இராணுவு முகாமொன்று அமைக்கப்பட்டுள்ளதால் அதற்கு முன்பாக உள்ள காணியில் எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு கோப்பாய் பொலிஸார் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது நீதிமன்றத்தில் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் தமிழீழ விடுதலை புலிகளின் சின்னங்களைகாட்சிப்படுத்தி, நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்வதற்கே தாம்எதிர்ப்பு தெரிவித்து வழக்குத் தாக்கல் செய்ததாக யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸார்கூறியுள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தின் 512 படையணியின் தலைமையகம் அமைந்துள்ள கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தற்கு எதிரில் மாவீரர் தினத்தை அனுட்டிப்பதை தடை செய்யுமாறு பொலிசார் விடுத்த வேண்டுகோளை யாழ் நீதிமன்றம் நிராகரித்து நிபந்தனை அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ள நிலையிலேயே கோப்பாய் பொலிசார் இவ்வாறு தெரிவித்திருக்கின்றனர்.

தமிழினத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிரைதியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூருவதற்கான ஏற்பாடுகள் தமிழர் தாயகமான வடக்குகிழக்கில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மாவீரர் வாரமும் கடந்த ஆண்டுகளைப் போலன்றி பெரும் எடுப்பில் அனுட்டிக்கப்பட்டுவருகின்றது.

எனினும் இவ்வாறான நினைவேந்தல் நிகழ்வுகளைமேற்கொள்வதற்கு தற்போதைய மைத்ரி – மஹிந்த கூட்டணி ஆட்சியில் உள்ள நிலையில் அரசதரப்பினராலும், கடும்போக்கு சிங்கள பௌத்தஅமைப்புக்களினாலும் கடும் எதிர்ப்புக்கள்வெளியிடப்பட்டுவருவதுடன், அதனைதடுப்பதற்கான முயற்சிகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்ஒரு பகுதியாக கோப்பாய் மாவீரர் துயிலும்இல்லத்திற்கு முன்பாக எதிர்வரும் 27 ஆம் திகத மாவீரர் தினத்தை நினைவுகூரும்நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அதற்கு தடைவிதிக்குமாறு கோரியும் நவம்பர் 21 ஆம் திகதிகோப்பாய் பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தனர்.

விடுதலை புலிகளை நினைவுகூரும் நினைவேந்தல்நிகழ்வுகளை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டிருந்த விசேட வர்த்தமானியையும்கோப்பாய் பொலிஸார் தமது வழக்கில் இணைத்திருந்தனர்.

இவ்வாறான நினைவேந்தல் நிகழ்வுகள் ஸ்ரீலங்காவில்தடைசெய்யப்பட்ட விடுதலை புலிகளை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அதனைதடைசெய்ய வேண்டும் எனவும் பொலிஸார் மன்றை கோரியிருந்தனர்.

எனினும் விடுதலை புலிகளை ஊக்குவிக்கும்வகையிலான நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான தயார்படுத்தல்கள் குறித்து தகுந்த ஆதாரங்களைபொலிஸார் முன்வைக்க தவறியமை குறித்து கேள்வி எழுப்பியிருந்த யாழ்ப்பாணம் நீதவான்நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன், நினைவேந்தல்நிகழ்வுகளை நிபந்தனையுடன் அனுஷ்டிப்பதற்கு அனுமதி அளித்துள்ளார்.

இதன்பிரகாரம் விடுதலை புலிகளின் சின்னங்கள், சீருடைகள் மற்றும் தமிழீழ வரைபடங்களை காட்சிப்படுத்தி, விடுதலை புலிகளை ஊக்குவிப்பதற்கு தடைவிதிக்குமாறு கோப்பாய்பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை நீதவான் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் தமிழீழவிடுதலை புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால் அவை தொடர்பில் விசாரணை செய்து அறிக்கைசமர்ப்பிக்குமாறும் நீதவான் கோப்பாய் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான வழக்கை எதிர்வரும் 29 ஆம் திகதிக்குயாழ் நீதவான் எஸ்.சதீஸ்தரன் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

-athirvu.in

TAGS: