இலங்கையில் 90 வீதமான பெண்கள் போக்குவரத்துக்களின்போது துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் நான்கு வீதமான பெண்கள் மாத்திரமே காவல்துறையில் முறைப்பாடுகளை செய்வதாக தரவுகள் வெளியாகியுள்ளன.
வருடந்தோறும் நவம்பர் 25ஆம் திகதி, ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நீக்கும் தினமாகும்.
இந்தநிலையில் பெண்களை பொறுத்தவரையில் அவர்கள், உடல் ரீதியாக, வாய்மூல ரீதியாக மற்றும் பாலியல் ரீதியாக துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
இந்த வன்முறைகள், வீடுகளில், வீதிகளில் மற்றும் போக்குவரத்து சாதனங்களில் வைத்து மேற்கொள்ளப்படுகின்றன என்று ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது
-athirvu.in