புதியபிரதமரை நியமிக்கத் தயாராக இருப்பதாக, சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைய பெரும்பான்மையை நிரூபித்தால், புதிய பிரதமரை நியமிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்காவின்பிரதமராக மஹிந்தராஜபக்ஸ நியமிக்கப்பட்டதன் பிற்பாடு நாட்டில் அரசியல் குழப்பம் நிலவி வருகின்றது. இந்தநிலையில், மகிந்த ராஜபக்சவுக்கு பெரும்பான்மைஇருந்தால் அவர் எந்த தடையுமின்றி பிரதமராக நீடிக்கலாம் என்றும், அவருக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்று நிரூபிக்கப்பட்டால், அவர் ஒரு முடிவை எடுப்பார் என்று நம்புவதாகவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
ரணில்விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றும் தானேபதவியில் இருந்து நீக்கி விட்டு, அவரை நியமிக்க முடியாது,என்பதில் உறுதியாக இருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில்பெரும்பான்மையைக் காட்டும் போது, கட்சித் தலைவர்கள் இணைந்து பணியாற்றவேண்டிய பொறுப்பு உள்ளதாகவும் 225 பேரைக் கொண்ட சபையில்யாருக்கு பெரும்பான்மை உள்ளதோ அவர் பிரதமராக இருப்பார் என்றும் ஜனாதிபதி தனதுசெவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
-athirvu.in