ஈழ தமிழ் இளைஞர்களை சுற்றிவளைக்கும் புலனாய்வாளர்கள்!

தேசிய மாவீரர் நாளினை முன்னிட்டு வடக்கு மாவட்டங்களில் புலனாய்வாளர்கள் மற்றும் பொலிசாரின் கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் இளைஞர்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பில் இராணுவப் புலனாய்வாளர்களும் ஏனைய புலனாய்வாளர்களும் ஈடுபட்டுள்ளார்கள். நாளைய தினம் மாவீரர் நாளுக்கு மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு எங்கெங்கே நடைபெற்றுகின்றது எங்கு மக்கள் கூடுகின்றார்கள் என்று தீவிரமாக விசாரிக்கும் பணியில் இராணுவப் புலனாய்வாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

மாவீரர் நாள் நிகழ்வுகள் எங்கெங்கு நடைபெறுகிறது யார் யார் கலந்துகொள்கின்றனர் மாவீரர்களுடைய பெற்றோர்கள் கௌரவிப்பு எங்கெங்கு நடைபெறுகிறது யார் செய்கின்றனர் என்ற விபரங்களை புலனாய்வாளர்களும் பொலிஸாரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

இதேவேளை பொலிசார் நிகழ்வுகளை நடத்துபவர்களை அழைத்து ஆலோசனைகள் வழங்கிவருவதோடு இரவு நேரங்களில் வீதிகளில் தடைகளை ஏற்ப்படுத்தி பதிவுகளை மேற்கொண்டும் வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-athirvu.in

TAGS: