நாடாளுமன்ற இன்றைய அமர்வின் போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் மாவீரர் தின அஞ்சலி செலுத்தப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,இன்றைய தினம் ஒழுங்கமைக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வில் செல்வம் அடைக்கலநாதன் உரையாற்றுகையில் இன்று எங்களுடைய மாவீரர் தினமாக இருக்கின்ற இந்நேரத்தில் அவர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அஞ்சலி செலுத்துவதாக கூறி அஞ்சலித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த நாடாளுமன்ற அமர்வுகளில் பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன அத்துடன் புத்தகம் ஒன்றை வீசி சபாநாயகரைத் தாக்க முற்பட்டனர். அந்த சந்தர்ப்பத்திலும் சபாநாயகர் அச்சமின்றி செயற்பட்ட விதம் பாராட்டத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார்.
-athirvu.in