புலனாய்வாளர்கள் மத்தியிலும் மாவீரர்களை அஞ்சலித்த தமிழ் விடுதலை புலிகள் கட்சி!

கார்த்திகை 27 மாவீரர் தினம் வவுணதீவு, தாண்டியடி துயிலுமில்லம் அருகே செவ்வாய்க்கிழமை 27-ஆம் திகதி மாலை 6.05 மணிக்கு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

பனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலை புலிகள் கட்சி மற்றும் சமூக நல அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் மற்றும் மண்முனை மேற்கு பிரதேசசபை தவிசாளர் எஸ்.சண்முகராஜா, பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பொதுச் சுடரினை மாவீரரின் தாய் ஒருவர் ஏற்றிவைத்ததுடன் ஏனைய சுடர்களை அங்கு வருகைதந்த ஏனையோரால் ஈகைச் சுடர் ஏற்றபட்டு உயிர் நீத்த மாவீர்களுக்கும் தமது உடன்பிறப்புக்களுக்கும் அஞ்சலியும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இதேவேளை இந் நிகழ்வு நடைபெற்ற வேளையில் இராணுவ புலனாய்வாளர்கள், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் அதிகம் காணப்பட்டனர்.

-athirvu.in

TAGS: