பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீரில் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்!

தேசிய மாவீரர் நாளான இன்று கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அணிதிரண்டு கண்ணிர் மல்க மாவீரர்களை நினைவில் ஏந்தினர்.

பிற்பகல் மூன்று மணி முதல் மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் பொது மக்கள் கனகபுரம் துயிலுமில்லம் நோக்கி வருகைதர தொடங்கினார்கள்.

ஒவ்வொருவரும் அங்குள்ள மூவாயிரத்திற்கு மேற்பட்ட சுடர்களுக்கு முன்னால் அமைதியாக நின்றிருக்க மாலை 6.05மணிக்கு மணியோசை எழுப்பட்டு தொடர்ந்து பொதுச் சுடரை லெப் கேணல் கில்மன், பிரிகேடியர் தீபன் ஆகிய மாவீரர்களின் தந்தையான வேலாயுதபிள்ளை ஏற்றி வைக்க தொடர்ந்து ஏனைய சுடர்களும் ஏற்றி வகைப்பட்டன. அதனைத் தொடர்ந்து துயிலுமில்ல பாடலும் ஒலிபரப்பட்டது.

-athirvu.in

TAGS: