ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்காமல் செயற்பட்டு வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ தரப்புக்கு சர்வதேசம் பாடம் புகட்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இரா.சம்பந்தன் கூறியுள்ளதாவது, “ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்காமலும், பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை ஏற்றுக்கொள்ளாமலும், அரசியலமைப்பை மீறிச் செயற்பட்டுவரும், மைத்திரி-மஹிந்த தரப்பினரின் அரசாங்கத்துக்கு, சர்வதேசம் பாடம் புகட்டும். அதற்கான காலம் தற்போது உதயமாகியுள்ளது.” என்றுள்ளார்.
-4tamilmedia.com

























