மட்டக்களப்பில் இரண்டு போலீசார் சுட்டு கொலை ! குழப்பத்தில் இலங்கை போலீஸ் ! படங்கள் உள்ளே

மட்டக்களப்பு- வவுணதீவு பகுதியில் இரு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக வவுணத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் வலுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தினேஸ் மற்றும் பிரசன்னா ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பு- வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் இவ்விரு பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டிருந்த வேளை, அவ்விடத்திற்கு வந்த இனந்தெரியாதோரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் வவுணத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

-eelamnews.co.uk

TAGS: