ஜி20 மாநாடு: சர்ச்சைகளுக்கு இடையே சந்தித்த உலகத் தலைவர்கள்

பல்வேறு சர்ச்சைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து உலகத் தலைவர்கள் விவாதிக்க இருக்கவுள்ள ஜி20 மாநாட்டின் தொடக்க விழா அர்ஜெண்டினாவில் நடைபெற்றது.

மாநாட்டை தொகுத்து வழங்கிய அர்ஜெண்டினா அதிபர் மௌரீசியோ மக்ரி, அனைத்து பிரச்சனைகளுக்கு “பேச்சுவார்த்தை” நல்ல தீர்வு தரும் என்றும் இதற்கான பொறுப்பு அனைத்து ஜி20 நாடுகளுக்கும் உண்டு என்றும் தெரிவித்தார்.

ஆனால், ஏற்கனவே யுக்ரேன் விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்து விட்டார்.

பருவநிலை மாற்றம், வணிகம் மற்றும் கஷோக்ஜி விவகாரங்களிலும் பெரும் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.

உலகின் ஆதிக்கம் மிக்க 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை உறுப்பினர்களாக கொண்ட ஜி20 கூட்டமைப்பு, உலக பொருளாதார உற்பத்தியில் 85 சதவீதமும், உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கையும் கொண்டுள்ளது.

2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இது, முக்கிய பிரச்சனைகளை சமாளிக்க உலகளாவிய கொள்கைகளை உருவாக்க அதன் உறுப்பினர் நாடுகளுக்கு ஒரு வாய்ப்பாக உள்ளது. ஆனால், பெரும்பாலான முக்கிய முடிவுகள், ஒருவருக்கு ஒருவர் நேரடியாக பேசியே எடுக்கப்படுகின்றன.

ஜி20 மாநாட்டை ஒட்டி, அர்ஜெண்டினா தலைநகர் பெய்னோசிரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை வங்கி விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜெண்டினா கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், இந்த மாநாட்டுக்கு பெரும் பணம் செலவழிக்கப்பட்டுள்ளதாக கோபமடைந்த சிலர், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடக்கக் கூட்டங்களில் நமக்கு தெரிய வருவது என்ன?

மேடைக்கு அழைக்கப்பட்ட உலக தலைவர்கள், அவரவர் இடங்களில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

தொடக்கக் கூட்டங்களில் நமக்கு தெரிய வருவது என்ன?படத்தின் காப்புரிமைMIKHAIL SVETLOV

புகைப்படத்தில் ஒரு ஓரத்தில் இருந்த சௌதி பட்டத்து இளவரசர் மொஹமத் பின் சல்மான், துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானிற்கு தூரமாக நின்றிருந்தார்.

சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி துருக்கியில் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து சௌதி பட்டத்து இளவரசர் முதல்முறையாக பெரும் மாநாட்டில் பங்கேற்கிறார். ‘சில மூர்க்கமான பாதுகாப்பு அதிகாரிகள்’ இந்த கொலையை செய்ததாக சௌதி குற்றஞ்சாட்டினாலும், மொஹமத் பின் சல்மான் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

புகைப்படம் எடுத்து முடித்ததற்கு பின்னர், ரஷ்ய அதிபர் புதினும், சல்மானும் சில நொடிகள் பரிமாறிக் கொண்டனர்.

ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சௌதி இளவரசர் மொஹமத் பின் சல்மான்படத்தின் காப்புரிமைSAUL LOEB
Image captionரஷ்ய அதிபர் புதின் மற்றும் சௌதி இளவரசர் மொஹமத் பின் சல்மான்

பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங், சௌதியின் மொஹமத் பின் சல்மானுடன் 5 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறும் பிரான்ஸ் அதிகாரி ஒருவர், கஷோக்ஜி விவகாரத்தில் “மிக உறுதியான” சில செய்திகளை சல்மானிடம் அதிபர் மக்ரோங் தெரிவித்ததாக கூறினார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், சௌதி இளவரசர் சல்மானை நட்பு ரீதியாக சந்தித்தார் என சௌதி ஊடகம் தெரிவித்தது. எனினும், எந்த விவாதமும் நடைபெறவில்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.

பிரட்டன் பிரதமர் தெரீசா மே-வும் சௌதி இளவரசரை சந்தித்தார். “கஷோக்ஜி கொலைக்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இது போன்ற ஒரு வருந்தத்தக்க சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க வேண்டும்” என்று பிரதமர் மே கூறியதாக பிரிட்டன் பிரதமர் அலுவலக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

தொடக்க விழாவில் பேசிய அர்ஜெண்டினா அதிபர் மக்ரி, சில விவகாரங்களில் உள்ள கருத்து வேறுபாடுகளை சமாளிக்க வேண்டும் என்று ஒப்புக் கொண்டார்.

மாநாட்டை ஒட்டி நடக்கப் போவது என்ன?

கருப்புக்கடலில் க்ரைமியா அருகே மூன்று யுக்ரேனிய கப்பல்கள் மற்றும் 24 மாலுமிகளை ரஷ்யா கைப்பற்றி அவற்றைத் திரும்பித் தராத காரணத்தினால் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

“எங்களுக்கு இது பிடிக்கவில்லை. யாருக்கும் பிடிக்கவில்லை,” என அவர் தெரிவித்தார்.

மாநாட்டை ஒட்டி நடக்கப் போவது என்ன?படத்தின் காப்புரிமைALEXANDER NEMENOV

இந்த முடிவிற்கு ரஷ்யா வருந்துவதாக, புதினின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார். “அப்படியானால் ரஷ்ய அதிபர் வேறு முக்கிய சந்திப்புகளை நடத்த இரண்டு மணி நேரம் அதிகம் கிடைத்துள்ளது,” எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நெருக்கடிக்கு “முழு காரணம்” ரஷ்யாதான் என்று குற்றஞ்சாட்டியுள்ள ஜெர்மன் அதிபர் ஏங்கலா மெர்கல், அதிபர் புதினுடன் இந்த விவகாரத்தை எழுப்பப்போவதாக தெரிவித்திருக்கிறார்.

இரண்டாவது பெரிய சந்திப்பும் டிரம்ப் சம்மந்தப்பட்டதே. அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் இரவு உணவில் கலந்து கொள்கிறார்.

இரு நாடுகளுக்கிடையே உள்ள வணிக வரி தொடர்பான பிரச்சனைகள் முக்கிய விவகாரமாக பேசப்படும்.

ஜி20 மாநாடு:படத்தின் காப்புரிமைHANDOUT

இதுவரை நடந்தது என்ன?

ஜி20 மாநாடு அதிகாரப்பூர்வமாக தொடங்கியதற்கு முன்பு, மெக்ஸிகோ மற்றும் கனடா நாட்டு தலைவர்களுடன் அதிபர் டிரம்ப் வணிக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார்.

நப்தா வணிக ஒப்பந்தத்திற்கு பதிலாக கொண்டுவரப்பட்டுள்ள இந்த அமெரிக்கா-மெக்ஸிகோ-கனடா உடன்படிக்கையானது “இதுவரை கையெழுத்திடப்பட்ட வணிக ஒப்பந்தங்களில் சிறந்ததாக இருக்கும்” என அதிபர் டிரம்ப் இதனை விவரித்துள்ளார்.

“மூன்று நாடுகளும் இதனால் பயன்பெறும்” என்றும் அவர் குறிப்பிட்டார். -BBC_Tamil