பொலிஸ் கொலை தொடர்பில் கருணா கூறிய தகவல்!

மட்டக்களப்பில் நடந்த பொலிஸ் கொலைக்கும் தனக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை என்று கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அதுதொடர்பில் தன்மீது சுமத்தப்படும் எந்தவொரு குற்றச் சாட்டையும் ஏற்கத் தயார் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு வவுணதீவில் நேற்றிரவு கொல்லப்பட்டதாக கூறப்படும் பொலிஸாரின் கொலை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் நளின் பண்டார கருணா மீது நாடாளுமன்றில் குற்றச் சாட்டை முன்வைத்திருந்தார்.

இதற்கு பதிலளித்த முரளிதரன்,

“ இந்த குற்றச் சாட்டை நான் முற்றாக மறுக்கிறேன். நளின் பண்டார பைத்தியக்காரத்தனமாக கூறுகிறார். நான் டுவிற்றர் தளத்தில் வெளிப்படுத்தியதாகக் கூறப்படும் விடயம் தொடர்பில் பேசுகின்றனர். உண்மையில் அந்த டுவிட்டர் தளம் என்னுடையது இல்லை. ஐக்கிய தேசியக் கட்சி வேண்டுமென்றே இவ்வாறான குற்றச் சாட்டை என்மீது திணிக்க முனைகிறது.” என்றார்.

-athirvu.in

TAGS: