நேற்றைய (02) தினம் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் பல்துறை விற்பன்னர்களை கெளரவிக்கும் நிகழ்வு வவுனியா கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வடக்குமாகாணசபை முதலமைச்சர் கலந்துகொண்டார்.
கடந்த வாரங்களில் வவுனியாவில் பரபரப்பாக பேசப்பட்ட விடயம் என்றால் அது இவ் விருது வழங்கும் விழா தான். இவ்விழாவிற்க்கு ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியாலும் அவர்கள் சார்ந்த ஊடகவியலாளர்களாலும் பல சர்ச்சையான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன, ஆனால் இங்கு வருகைதந்த மக்களை பார்க்கும் போது அவர்கள் கூறியது யாவும் இவ் நிகழ்ச்சிக்கான விளம்பரமாகவே காணப்படுகிறது.
அரங்கம் நிறைந்த மக்களை காணக்கூடியதாக இருந்தது. மேலும் இவ் விழாவின் ஒழுங்கு படுத்தல்கள் தொழிநுட்பத்தை சிறப்பாக பயன்படுத்திய விதம் ஒளி மற்றும் ஒலி அமைப்புகள் அருமையாக காணப்பட்டன.
இந்திய திரையுலக விருது வழங்கும் விழாவிற்கு நிகரான ஓர் நிகழ்வாக இவ் விழா அவதானிக்கப்பட்டது எனலாம். மேலும் இதுவரை காலமும் வவுனியா மண்ணில் இப்படியான பிரமாண்ட விழாவை யாரும் கண்டிருக்கமாட்டார்கள் எனலாம்.
வவுனியா மாவட்டம் முழுதும் அலசி ஆராய்ந்து திறமை மிகு பல்துறை விற்பன்னர்களை தேர்ந்தெடுத்துள்ளார்கள். இவ் விழாவிற்கு வரமாட்டோம் என்ற சில ஊடகவியலாளர்களும் குறிப்பிட்ட அரசியல் கட்சியினரும் வீட்டில் இருந்தே Facebook live இல் இவ் விழாவை கண்டு களித்துள்ளார்களாம் என்ற தகவலும் கிடைக்கப்பெற்றுள்ளது.
மேலும் இவ் விழாவை குளப்புவதற்கு தமிழரசு கட்சி, ஸ்ரீலங்கா புலனாய்வாளர்களிடம் விலைபோன வவுனியாவிலிருக்கும் சில ஊடகவியலார்களால் மேற்கொள்ளப்பட்ட சதி திட்டங்கள் மக்களின் முயற்சியுடன் முறியடிக்கப்பட்டுள்ளதாக அங்கு வருகைதந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.
அத்துடன் அவ் குறிப்பிட்ட அரசியல் கட்சியின் சில முக்கிய உறுப்பினர்களும் இவ் விழாவில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எது எவ்வாறாக இருப்பினும் இவ் விழா எதிர்பார்த்ததை விட பிரம்மாண்டமே.
மேலும் குறித்த விருதுவிழா மற்றும் சீ.வி விக்னேஸ்வரன் பற்றி புலனாய்வாளர்களிடம் விலைபோன வவுனியாவிலிருக்கும் சில ஊடகவியலார்களால் தவறாக அனுப்பிய செய்தியை தங்களது தகுதியற்ற இணையத்தள ஊடகவியலார்களுக்கு கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் ஈழத்தில் உள்ள சில முன்னணி ஊடகங்கள் பிரசுரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தங்கள் சுயநலத்துக்காக இவ்வாறான இவ்வாறான போலி செய்திகளை வெளியிடும் விபச்சார ஊடகங்களை ஈழத்து மக்கள் இன்னும் ஆதரித்து வருகிறார்கள் என்பதே புத்தியீவிகளின் வருத்தம்.
வன்னி மக்கள்..
-athirvu.in