அரசியல் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வைக் காணுங்கள்; இலங்கையிடம் பிரித்தானியா வலியுறுத்தல்!

இலங்கையில் அரசியல் நெருக்கடி நீடிக்கின்ற சூழ்நிலையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது குறித்து ஆராய்ந்து வருவதாக பிரித்தானியாவின் வெளிவிவகார (பொதுநலவாய) அலுவலகத்திற்கான அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாப் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அமைச்சர், அனைத்து தரப்பினரும் வன்முறைகளை தவிர்ப்பதும் தற்போதைய நெருக்கடிக்கு கூடிய விரைவில் அமைதி தீர்வை காண முயல்வதும் முக்கியம் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான எங்கள் உயர்ஸ்தானிகர் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் தொடர்ச்சியாக சந்தித்து வருவதுடன், பாராளுமன்ற அமர்வுகளில் சில உறுப்பினர்கள் செயற்பட்ட விதம் குறித்து எங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளார் எனவும் அமைச்சர் மார்க் பீல்ட் கூறியுள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கான வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ள அமைச்சர், 2019இல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள எண்ணியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: