முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது குறித்து இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் யோசனை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த யோசனைக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் இறுதி சந்தர்ப்பத்திலேயே தீர்மானிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதற்கமைய 11ஆம் திகதி இரவு அல்லது 12ஆம் திகதி காலை தீர்மானிப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு வட,கிழக்கு மக்கள் அச்சப்படுகின்றனர். இதனாலேயே சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிர்ப்பு வெளியிடுகின்றோம். வேறு காரணங்கள் ஒன்றும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-tamilcnn.lk