சிறிலங்கா நிலவரம்: அமெரிக்கா, இந்தியா உயர்மட்ட ஆலோசனை

சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பாக இந்தியாவும், அமெரிக்காவும் உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், அமெரிக்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, அவர் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மாட்டிஸ் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

இந்தச் சந்திப்புகளின் போது, இந்தோ- பசுபிக் பிராந்தியத்தின் தற்போதைய நிலவரம் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தி ஆராயப்பட்டது.

குறிப்பாக, சிறிலங்காவின் அண்மைய நிலவரங்கள் குறித்து இந்தச் சந்திப்பின் போது, முக்கியமாக- விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மாலைதீவு ஆகிய நாடுகள் தொடர்பாகவும் அமெரிக்க- இந்திய தரப்புகள் பேச்சுக்களை நடத்தியுள்ளன.

TAGS: