அரசியல் நெருக்கடிகளால், இலங்கைக்கு கடன் வழங்க இணங்கிய பல சர்வதேச நிதி நிறுவனங்கள், தமது முடிவுகளை இடைநிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய அரசியல் இழுபறி களால், சட்டரீதியான அரசாங்கம் தொடர்பான கேள்விகள் எழுந்துள்ள காரணத்தாலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் வரும் ஜனவரி தொடக்கம் ஏப்ரல் மாதத்துக்கிடையில், 1.5 பில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது. இதில் 1 பில்லியன் டொலர் வரும் ஜனவரி 15ஆம் திகதி செலுத்தப்பட வேண்டும். இதற்காக, சீன அபிவிருத்தி வங்கியிடம் 500 மில்லியன் டொலரை கடனாக பெறுவதற்கான பேச்சுக்கள் நடத்தப்பட்டிருந்தன.
இதனால் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகும் வரை, தமது கடன்கள் தொடர்பான முடிவுகளை எடுப்பதை சர்வதேச நிதி நிறுவனங்கள், நிறுத்தி வைத்துள்ளன.
ஆனால், அரசாங்கத்தின் சட்டபூர்வ தன்மை தொடர்பான இழுபறியினால், இந்தக் கடனை சீன அபிவிருத்தி வங்கி நிறுத்தி வைத்துள்ளது. ஏற்கனவே சீன அபிவிருத்தி வங்கியிலும் இலங்கை அரசாங்கம் 1 பில்லியன் டொலரை கடனாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-athirvu.in