அனைத்துலக மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு பிரித்தானிய நாடாளுமன்றில் இலங்கை இனப்படுகொலை தொடர்பான மாநாடு ஒன்று நடைபெற்றுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று திங்கட் கிழமை இந்த மாநாடு இடம்பெற்றுள்ளது.
இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் சம்பந்தப்பட்டவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதை கோரியும் இந்த மாநாடு இடம்பெற்றுள்ளதாக ஏற்பாட்டாளர்களால் கூறப்பட்டுள்ளது.
-eelamnews.co.uk