பிணையைத் தவணையில் கட்டுவதற்கான நஜிப்பின் வேண்டுகோளை நீதிமன்றம் நிராகரித்தது

 

1எம்டிபி கணக்காய்வாளர் அறிக்கையில் சட்டவிரோதமாக மாற்றங்கள் செய்ததற்காக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் தமக்கு விதிக்கப்பட்டுள்ள ரிம500,000 பிணையைத் தவணையில் கட்டுவதற்கு கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்திடம் இன்று அனுமதி கோரினார்.

நஜிப்பின் வேண்டுகோளை செசன்ஸ் நீதிமன்றம் இன்று நிராகரித்து விட்டது.

நஜிப்பின் வழக்குரைஞர் முகம்மட் ஷாபி தமது கட்சிக்காரருக்கு விதிக்கப்பட்டுள்ள ரிம500,000 பிணைப் பணத்தில் ரிம200,000-ஐ இன்று கட்டவும் இன்னொரு ரிம200,000-ஐ நாளை கட்டவும் எஞ்சியுள்ள ரிம100,000-ஐ வெள்ளிக்கிழமை கட்டவும் அனுமதிக்குமாறு நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார்.

அவ்வேண்டுகோளை நிராகரித்த நீதிபதி அஸுரா அல்வி, பிணைப் பணத்தைத் தவணையில் கட்ட முடியாது. அது உடனே காலந்தாழ்த்தாமல் கட்ட வேண்டும் என்று கூறினார்.

ஷாபி வலியுறுத்தைத் தொடர்ந்து, நீதிபதி: “இல்லை, இன்றைக்குள்”, என்று பதில் அளித்தார்.