சிரியா: ‘சித்திரவதை செய்து கொல்லப்பட்ட’ நூற்றுக்கணக்கான உடல்கள் கண்டெடுப்பு

சிரியாவின் கிழக்குப் பகுதியில் ஐ.எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த இடம் ஒன்றில், நூற்றுக்கணக்கானோரின் உடல்கள் புதைக்கப்பட்ட ஏழு மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அரசு செய்தி முகமையான சனா கூறியுள்ளது.

கண்டுடெக்கப்பட்ட உடல்களில் ‘சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட’ அறிகுறிகள் தென்படுவதாக அந்த செய்தி கூறுகிறது.

கொலைசெய்யப்படும் முன்பு அவர்களில் சிலரது கண்களும் கைகளும் கட்டப்பட்டன. கொல்லப்பட்டவர்களில் பெண்களும் அடக்கம்.

-BBC_Tamil

TAGS: