தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் அடைய முடியாத தமிழீழத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் தமிழீழ இலக்கு அடைய முடியாமல் போய்விட்டது.
தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியின்யின் மீதும், அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் மீதும் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.
மறைமுகமான சமஷ்டி யாப்பின் மூலம் தமிழீழத்தை அடைந்துக்கொள்வதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
தமிழீழத்தை பெற்றுக்கொள்ள ரணில் விக்கிரமசிங்க போன்ற அரசியல்வாதி பயன்படுத்தப்படுகின்றார் என்றும் அவர் தெரிவித்தார்.
-eelamnews.co.uk