நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்பிற்கு முரணானதென தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மீண்டும் தேசிய அரசாங்கத்தை நிறுவுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு அங்கமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 10 உறுப்பினர்கள் இணைந்து, ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைப்பதற்காக ஆதரவு வழங்கவுள்ளனர்.
நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் இந்த விடயத்தை தெரிவிக்கின்றன.
அதன் பிரகாரம் துமிந்த திஸாநாயக்க தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் ரணிலை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயர்நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரி மற்றும் ஐ.தே.க. தலைவர் ரணிலை ஒவ்வொரு தரப்பினரும் தனித்தனியாக சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக துமிந்த திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் நேற்றிரவு ஜனாதிபதியை சந்தித்தபோதே, ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைப்பதற்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.
இதேவேளை, மஹிந்த உள்ளடங்களான அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை மீதான உயர்நீதிமன்றின் தீர்ப்பு இன்று வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன் பின்னரே எதிர்கால அரசியல் தொடர்பான தீர்க்கமான முடிவு எட்டப்படுமென இரு பிரதான கட்சிகளும் தெரிவித்துள்ளன.
-eelamnews.co.uk