யாழ்ப்பாணத்தில் செயற்படும் பெரும்வர்த்தகர்கள் என கூறப்படுபவர்களில் அனேகமானோர் குடாநாட்டு மக்களை ஏமாற்றியும் யுத்தகாலத்தில் பொருட்களை மிக அதிக கூடிய விலைக்கு விற்றுமே கோடீஸ்வரராக வந்தவர்கள். சாதாரணமாக சறத்துடன் வீதியி்ல நின்று மண்ணெண்ணைய் விற்ற மகேஸ்வரன் எவ்வாறு&ன்ப்ச்ப்; மிகக் குறிகிய காலத்தில் கோடீஸ்வராக வந்தவர் என்பதும் அமைச்சராக வந்தவர் என்பதும் அனைவருக்கும் தெரிந்தவிடயமாகும். தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தகர்கள் வியாபார உத்திகள் தெரியாமல் அல்லாடி வருவதுடன் கடன்காரர்களாக மாறுவதற்கும் காரணம் அவர்கள் நியாயமான முறையில் வர்த்தகம் செய்யாமல் இருப்பதே ஆகும.
கடந்த சில நாட்களுக்கு முன் பேராசைப்பட்ட யாழ்ப்பாண வர்த்தகருக்கு நடந்த கேவலத்தை இங்கு தருகின்றோம். ஈயத்திற்கு தங்கமுலாம் பூசி, அதை விடுதலைப்புலிகள் புதைத்து வைத்திருந்த தங்கம் என்று கூறி, யாழ் வர்த்தகரிற்கு 23 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல விடுதியொன்றின் உரிமையாளரின் தலையிலேயே மிளகாய் அரைக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி சம்பவம் அண்மையில் கிளிநொச்சியில் நடந்துள்ளது.யாழ் விடுதி உரிமையாளருடன் நெருக்கமாக பழகி, அவரை நூதனமாக வலையில் வீழ்த்தி, இந்த மோசடி இடம்பெற்றுள்ளது. ஒரு மாதத்தின் முன்பாக, யாழ் விடுதி உரிமையாளரிறகு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. யாழில் தங்குவதற்கு அறைகள் தேவையென தொலைபேசியில் பேசியவர் கேட்டுள்ளார். அனுராதபுரத்தை சேர்ந்த அந்த நபர், பின்னர் அந்த விடுதியில் தங்கிச் செல்வதை வழக்கமாக இருந்துள்ளது.
இந்த சிங்கள நபரே அச்சு அசலாக , புலிகளின் தங்க நாணயங்கள் போல போலியான நாணயங்களை செய்து வந்து பல தமிழ் வர்தகர்களை இவ்வாறு ஏமாற்றிச் சென்றுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது.
-athirvu.in