சிறிலங்காவின் பிரதமராக மீண்டும் பதவியேற்க வருமாறு ஐக்கியதேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபாலசிறிசேன அழைப்பு விடுத்திருக்கின்றார்.
இதற்கமைய ரணில் விக்கிரமசிங்க டிசெம்பர் 16 ஆம் திகதியான ஞாயிற்றுக்கிழமைமுற்பகல் 10.30 க்கு ஜனாதிபதி செயலகத்தில் ஐந்தாவது தடவையாகவும் சிறிலங்காவின்பிரதமராக ரணில் பவியேற்கவுள்ளார்.
சிறிலங்கா உச்ச நீதிமன்றின் அடுத்தடுத்த தீர்ப்புக்களைஅடுத்து, உள்ளூர் நேரப்படி இன்றைய தினம் இரவு தொலைபேசி ஊடாக சிறிலங்காஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ரணிலை தொடர்புகொண்டு பிரதமராக பதவியேற்க வருமாறுஅழைப்பு விடுத்ததாக ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராஜித்தசேனாரத்ன தெரிவித்தார்.
இதற்கமைய டிசெம்பர் 16 ஆம் திகதியான ஞாயிற்றுக்கிழமைமுற்பகல் 10.30 க்கு ஜனாதிபதி செயலகத்தில் ஐந்தாவது தடவையாகவும் சிறிலங்காவின்பிரதமராக ரணில் பதவியேற்பார் என்றும் அதனை அடுத்து அமைச்சரவை பதவியேற்கும் என்றும் ராஜித்த கூறினார்.
-athirvu.in

























