இலங்கையில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி தீர்க்கப்பட்டுள்ளமையை இந்தியா ஏற்றுக்கொள்வதாகவும் தொடர்ந்து வரும் நாள்களில் இந்தியா- இலங்கைக்கிடையிலான உறவை வளர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றப் பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவது,
இந்தியாவின் அயல் நாடான இலங்கையில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி தீர்க்கப்பட்டுள்ளமையை இந்தியா ஏற்றுக்கொள்கின்றது. இது அரசியல் ஒருமைப்பாட்டின் வெளிபாடு அதேப்போல் இலங்கையின் ஜனநாயகம் குறித்த நிறுவனங்களில் நிலைநாட்டப்பட்டுள்ளதை வெளிக்காட்டுகின்றது.
இலங்கையில் மக்களை முதன்மைப்படுத்தி முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு இந்தியா முழுமையான பங்களிப்பை வழங்கும். எனவே இந்தியா- இலங்கை உறவு தொடர்ந்தும் முன்னெடுக்கபடுமென தாம் நம்புவதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ரவிஷ்குமார் வெ ளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்குப் பின்னர் இந்தியா வெளியிட்டுள்ள முதலாவது உத்தியோகப்பூர்வ அறிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
-tamilmirror.lk

























