வடகொரியாவின் அதிகரிக்கும் உயர் தொழில்நுட்ப லட்சியங்கள்

வடகொரியா அடிக்கடி தனது ராணுவத் தளவாடங்களை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும். ஆனால், சமீப காலமாக பொது மக்களுக்கான தொழில்நுட்பங்களில் அது முன்னேறி வருவதாகத் தோன்றுகிறது – அல்லது அப்படி சொல்லிக் கொள்கிறது.

நாட்டில் உள்ள பல விஷயங்களைப் போல, இந்தக் கூற்றினை சரிபார்ப்பது கடினம்தான். ஆனால், தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.

சமீபகால மாதங்களில், “அறிவுசார் வீட்டு முறைமைகள்” உள்பட முன்னேற்றகரமான தொழில்நுட்பங்களில் ஏராளமான சாதனைகள் நடந்திருப்பதை அரசு ஊடகம் வெளிப்படையாகக் கொண்டாடியது.

பிரச்சாரத்துக்கான தேவையைக் கடந்து, இந்தத் துறைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், பொருளாதார வளர்ச்சிக்காக தொழில்நுட்பத்தை செம்மைப்படுத்துவதில் வடகொரியாவுக்கு உள்ள லட்சிய விருப்பத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது. இது அந்த நாட்டின் தலைவராக உள்ள கிம் ஜோங் உன்-னின் முக்கிய இலக்காக உள்ளது.

வளர்கிறதா தொழில்நுட்பத் திறன்?

மிக சமீபத்திய தொழில்நுட்ப முயற்சியாக இருப்பது “மிர்ரே” என்று அழைக்கப்படும் புதிய வைஃபை தொழில்நுட்பம். பியாங்கியாங் நகரில் இன்ட்ராநெட் நெட்வொ்க்கை செல்போன்கள் மூலம் அணுகும் வசதியை இது அளிக்கிறது.

தகவல் தொழில்நுட்ப வெற்றிகளின் கண்காட்சி'' ஒன்றில்மிர்ரே” -வை ஏரிரங் 171 ஸ்மார்ட்போன் மூலம் தொடர்பு கொள்வதை அரசுக்குச் சொந்தமான கொரியன் சென்ட்ரல் தொலைக்காட்சி நவம்பர் 8 ஆம் தேதி காட்டியது.

வடகொரிய ஊடகத்தில், வெளிப்புற வைஃபை வசதி முதன்முறையாக காட்டப்பட்டது என்று அமெரிக்காவைச் சேர்ந்த கண்காணிப்பு இணையதளம் 38நார்த் கூறியுள்ளது. நாட்டில் வயர்லெஸ் இன்டர்நெட் வசதியை இரண்டு செல்போன் நிறுவனங்கள் அளிப்பதாகவும் அதில் காட்டப்பட்டது.

அந்தக் கண்காட்சியில் காட்டப்பட்ட மற்றொரு சாதனம் “அறிவுசார் வீட்டு முறைமை.” இது மனிதனின் குரலை அடையாளம் கண்டு, மின்விசிறிகள், ஏர் கண்டிஷனர்கள், தொலைக்காட்சிகள், மின் விளக்குகள் போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்களை இயக்கக் கூடியதாக உள்ளது.

இந்த முறைமையை கிம் இல்-சுங் பல்கலைக்கழகம் உருவாக்கியது. நாட்டின் உயர் தொழில்நுட்ப பெருமுயற்சிகளில் இந்தப் பல்கலைக்கழகம் முன்னோடியாக இருப்பது போலத் தெரிகிறது.

வடகொரிய பிரசார இணையதளத்தில், கொரிய மொழிக் குரலை அறியும் மென்பொருள் உள்பட, முன்னேற்றகரமான செயற்கை அறிவுசார் முறைமைகளை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர் என்று நவம்பர் 21 ஆம் தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவின் அதிகரிக்கும் உயர் தொழில்நுட்ப லட்சியங்கள்

பல்கலைக்கழகத்தின் அறிவுசார் தொழில்நுட்ப நிலையம் “செயற்கை அறிவுசார் நுண்ணறிவுத் துறையில் உயர்ந்த நிலையை பிடிக்க வேண்டும் என்ற லட்சியத்திலும், நாட்டில் செயற்கை அறிவுசார் நுண்ணறிவு தொழில்நுட்பத் துறையை உருவாக்குவதற்கு பங்களிப்பு செய்வதிலும்” மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறது என்று ஆளும் தொழிலாளர் கட்சியின் செய்தித்தாளான ரோடோங் சின்முன் – நவம்பர் 2 ஆம் தேதி ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது.

நாட்டின் ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சேவைகள் “உண்மையானவை என்றும், குறைந்தபட்சம் பியாங்கியாங் நகரில் மக்கள் பயன்படுத்துவதைப் போலத் தெரிகிறது” என்றும் மதிப்புக்குரிய வடகொரிய தொழில்நுட்ப வலைப்பூ ஒன்றை நடத்தி வரும் மார்ட்டின் வில்லியம்ஸ் பி.பி.சி. மேற்பார்வைக் குழுவிடம் தெரிவித்தார்.

“வடகொரியாவில் திறமையான மென்பொருள் மற்றும் கணினிப் பொறியாளர்கள் இருக்கிறார்கள். எனவே சிறப்பு முக்கியத்துவத்துடன் அறிக்கைகளில் குறிப்பிடப்படும் மென்பொருள்களில் பலவும் உண்மையானவை மற்றும் வட கொரியாவில் எழுதப்பட்டவை”.

பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்வது மற்றும் “தேசிய வல்லமையை” உத்வேகப்படுத்துவது என்ற முன்முயற்சி தான், தொழில்நுட்ப முதலீடுகளின் பின்னணியில் இருப்பதாகத் தெரிகிறது.

அறிவியலும் கல்வியும் நாட்டை உருவாக்குவதில் அடிப்படைத் தளமாக இருக்க வேண்டும் என்றும், நாட்டின் பலத்தைக் காட்டும் முக்கியமான குறியீடுகள்'' என்றும் ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆளும்கட்சியின் கூட்டம் ஒன்றில் கிம் ஜோங் உன் கூறினார்.அறிவியல் மற்றும் கல்வியின் பணியில் ஒரு புரட்சிகரமான திருப்பம்” ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரு கொள்கையை அவர் முன் வைத்தார் என்றும் அதிகாரப்பூர்வ கே.சி.என்.ஏ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அறிவியல் துறையினருக்கு ஊக்கமளிக்கும் வகையில், விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு “ஆடம்பரமான” அடுக்குமாடி வீடுகள் மற்றும் பிற முன்னுரிமைகள் போன்ற ஊக்கத் திட்டங்களை வடகொரியா அளிக்க முன்வந்துள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பரவலான கவனம் உள்ளது குறித்த தகவல்கள் வடகொரிய அரசு ஊடகம் மற்றும் பிரச்சாரத் துறைகளில் அதிக அளவில் வெளியாகத் தொடங்கியுள்ளன.

அசாதாரணமான ஒரு நடவடிக்கையாக ரோடோங் சின்முன் அக்டோபர் 29 ஆம் தேதி சமூக அறிவியல் அகாடமியின் பொருளாதாரக் கல்விநிலைய பேராசிரியர் ரி கி-சோங் எழுதிய கட்டுரை ஒன்றை வெளியிட்டது. வடகொரிய பொருளாதாரம் உயர்-தொழில்நுட்ப “அறிவுசார் பொருளாதாரமாக” நிலைமாற்றம் அடைய வேண்டும் என்று அந்தக் கட்டுரையில் அவர் கூறியுள்ளார்.

வடகொரியாவின் அதிகரிக்கும் உயர் தொழில்நுட்ப லட்சியங்கள்

குறிப்பிட்டுச் சொல்வதாக இருந்தால், தகவல் தொழில்நுட்பம், நானோ தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம் ஆகியவற்றையும், போட்டியில் தனித்து நின்று வெற்றி காணக் கூடிய தொழில்நுட்பங்களையும் உலகத் தரங்களின் அளவுக்கு மேம்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதே பத்திரிகையில் டிசம்பர் 8 ஆம் தேதி வெளியான ஒரு சிறப்புக் கட்டுரையில்'' வடகொரிய பொருளாதாரம்கடந்த காலத்தில் முன் எப்போதையும்விட அதிகமாக புதிய சிந்தனை வழியில் வளர்ந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “உள்நாட்டு நுட்பங்கள் சார்ந்த நிலைக்கு முன்னுரிமை தரப்படும் என்றும், பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் அறிவியல் தொழில்நுட்பம் மேம்படுத்தப்படும்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“உயர்ந்த மதிப்பு- கூட்டப்பட்ட தொழில்களை அறிமுகம் செய்வது பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் என்பது நன்கறிந்த விஷயம். வடகொரியா தனது நான்காவது தொழில் புரட்சியின் பாதையில் செல்வதைப் போலத் தெரிகிறது,” என்று தென் கொரியாவின் கியங்னம் பல்கலைக்கழகப் பேராசிரியர் லிம் எயுல்-ச்சுல் கூறியதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் நவம்பர் 21ல் கூறியுள்ளது.

எனவே வடகொரியா, புதுமை சிந்தனைகளின் தொகுப்பிடமாக மாறும் வழியில் சென்று கொண்டிருக்கிறது.

`கடினமான சமன்படுத்தும் செயல்பாடு’

தென்கொரியாவைப் போல அல்லாமல் – வடகொரியா தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்குப் பெயர் பெற்ற நாடு அல்ல – என்பதால் சிறிதளவு சந்தேகமும் இருக்கிறது.

“முன்னேறிய உற்பத்தித் துறையில் வடகொரியாவுக்கு அதிக பலம் கிடையாது. எனவே உள்நாட்டில் தயாரித்ததாக அடிக்கடி வெளிக்காட்டப்படும் தொலைபேசிகளும், கம்ப்யூட்டர்களும் சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்டவை” என்று வில்லியம்ஸ் குறிப்பிடுகிறார்.

ஜப்பானை சேர்ந்த டிரெண்ட் மைக்ரோ என்ற நிறுவனம், தங்களுடைய அறிவுசார் சொத்துரிமையை அல்லது அதன் SiliVaccine tool-ன் ஆதாரக் குறியீடுகளை வடகொரியர்கள் சட்டவிரோதமாக காப்பியடித்துவிட்டார்கள் என்று 2018 மே மாதம் கூறியது.

கடந்த ஆண்டில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட டேப்லட் கம்ப்யூட்டரை குறிப்பிடுவதற்கு ஆப்பிள் நிறுவனத்தின் டிரேட்மார்க்கான ‘ஐ-பேட்’ என்ற சொல்லை வடகொரிய ஊடகம் பயன்படுத்தியது. அதை “Ryonghung IPad” என்று கூறிக் கொண்டது.

வடகொரியாவின் அதிகரிக்கும் உயர் தொழில்நுட்ப லட்சியங்கள்

நேரடியாக காப்பியடித்து தயாரித்த பொருள்கள் முதல், அதன் மாதிரியாகவே தயாரித்த பொருள்கள் வரை என்ற நிலையில்,ஐபேட்” போன்ற சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள டிரேட்மார்க் பொருள்களை வெளிப்படையாக பயன்படுத்துவது வரையில், வெளிநாட்டுப் பொருட்களின் காப்பியாக உள்ளதற்கு வடகொரிய தொழில்நுட்ப உலகம் நிறைய உதாரணங்களைக் கொண்டதாக இருக்கிறது” என்று என்.கே. நியூஸ் இணையதளம் 2017ல் கட்டுரை வெளியிட்டது.

வடகொரியாவின் நோக்கங்கள், அதன் தொழில்நுட்ப திறன் பற்றாக்குறையைத் தாண்டியதாக இருப்பது பிரச்சினையாக இருக்கிறது.

வடகொரியாவின் செயற்கை நுண்ணறிவு தொழில் துறை “நிதிப் பற்றாக்குறை, பொருளாதார சூழ்நிலை மற்றும் சர்வதேசத் தடைகள் காரணமாக சுவரில் மோதி நிற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று சோல் நகரின் கொரிய வளர்ச்சி வங்கி 2017ல் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தடைகள் நீக்கப்பட்டாலும் கூட, தங்களுடைய நற்பெயருக்கு ஊறு ஏற்படும் என்பதால் வடகொரியாவுடன் தொழில் செய்வதை சில நாடுகள் அல்லது சில நிறுவனங்கள் தவிர்க்கவே பார்க்கும்'' என்று வில்லியம்ஸ் கூறியுள்ளார்.
<ul class="story-body__unordered-list">
<li class="story-body__list-item"><a class="story-body__link" href="https://www.bbc.com/tamil/india-46589265">சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: 34 ஆண்டுக்குப் பின் சஜ்ஜன்குமாருக்கு ஆயுள்</a></li>
<li class="story-body__list-item"><a class="story-body__link" href="https://www.bbc.com/tamil/india-46570794">விவசாயக் கடன் தள்ளுபடி வாக்குறுதிக்கு மாறாக பேசினாரா ராகுல்? #RealityCheck</a></li>
</ul>
அரசு ஊக்கத்துடன் தென்கொரிய நிறுவனங்கள் பெரிய அளவில் முதலீடுகள் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன” என்று அவர் நம்புகிறார்.

உண்மையில், வடகொரிய மூத்த அதிகாரிகள் குழு ஒன்று நவம்பர் 15 ஆம் தேதி தெற்கில் தொழில்நுட்ப மையமாக உள்ள பாங்கியோ தொழில்நுட்பப் பகுதிக்குச் சென்றிருந்தது. தானே இயங்கும் கார்கள், 3 டி பிரிண்டிங், செயற்கை நுண்ணறிவு மற்றும் விளையாட்டு தொழில்நுட்பம் ஆகியவை பற்றி அறிந்து கொள்வதற்கு அந்தக் குழு சென்றிருந்தது.

தகவல்களைப் பரப்புவதில் வடகொரியாவின் “பொருத்தமற்ற பிரச்சார ” பாணி, மற்றொரு தடையாக இருக்கும். அது புதுமை சிந்தனைக்கு இடறுதல்களை ஏற்படுத்தும்.

“நாட்டின் கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொண்டு, தகவல்கள் மீது மக்களுக்கு உள்ள நாட்டத்தைப் பூர்த்தி செய்வது மற்றும் நல்ல வாழ்க்கை நிலையை அளிப்பதில் மெல்ல முயற்சிகள் எடுப்பது என்பதில் வடகொரிய அரசின் நம்பிக்கை கொண்டிருக்கிறது. இது கடினமான சமன்படுத்தும் செயல்பாடுதான்” என்கிறார் வில்லியம்ஸ். -BBC_Tamil