அதிகம் ஆடாதீர்கள்! எந்தநேரத்திலும் ஆட்சியை கவிழ்ப்பேன்! சீறும் மஹிந்த ! அப்பாச்சிநீ இன்னும் அடங்கலையா?

ஆட்சியை பிடிப்பதற்காக எந்தவொரு சூழ்ச்சியையும் நாங்கள் செய்யவில்லை.

நாங்கள் எதிர் கட்சியில் இருக்கும் நிலையில் ஆழுங்கட்சி ஆசனத்தில் இருக்கும் நீங்கள் நிதானமாக இருங்கள்.

மக்களை உங்களுக்கு எதிராக நிறுத்தி ஆட்சியை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கைப்பற்றும் வல்லமை எங்களிடம் உள்ளது.

என மஹிந்த ராஜபக்ஸ நாடாளுமன்றில் மீண்டும் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போது மஹிந்த எச்சரிக்கை விடும் வகையில் உரையாற்றினார்.

சூழ்ச்சி மூலம் அரசாங்கம் கைப்பற்றப்பட்டதாக பிரதமர் மற்றும் சபாநாயகர் குறிப்பிட்டீர்கள்.

நாங்கள் எந்தவொரு சூழ்ச்சியையும் மேற்கொள்ளவில்லை.

சபாநாயகர் மற்றும் ஆளும் தரப்பினர் ஒன்றை மாத்திரம் நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கும் வரை
உங்களுடைய ஆளும் கட்சி ஆசனம் குறித்து அதிகம் நம்பிக்கை கொள்ளாதீர்கள்.

எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்.
மக்களுக்கு எதிரான சூழ்ச்சியின் போது ஆட்சியை இல்லாமல் செய்யும் முயற்சியில் களமிறங்குவோம்.

அதனை மறந்து விடாதீர்கள். மக்களும் உங்களுக்கு எதிராக எதிர்த்து நிற்பார்கள் என எச்சரிக்கும் வகையில் மஹிந்த கருத்து வெளியிட்டார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் தலைமையில் காலையில் ஆரம்பமானது.

இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றியிருந்த
நிலையில் ஊடகங்கள் மீது கடுமையாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

-eelamnews.co.uk

TAGS: