வன்னிப்போரில் அழிந்துபோன தமிழினம் தலைதூக்க முன் இயற்கை துடைத்தழிக்கின்ற அவலம் வெந்த புண்ணில் தெய்வமே வேல்பாய்ச்சியதாகவே கருதவேண்டியுள்ளது.
போரின் அழிவில் இருந்து உயிரைக்காத்த மக்கள் குருவி சேர்த்தைப்போன்று கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கால்நடைகளை வளர்த்து தமது ஜீவனோபாயத்தை நடாத்திவந்த அம்மக்களை இயற்கை வாட்டி வதைப்பதானது மீண்டும் துயரில் ஆழ்த்தியுள்ளது.
எனவே உதவும் எண்ணங்கொண்டோர் தங்களால் இயன்ற உதவிகளை இம்மக்களுக்கு செய்வதன் மூலம் அவர்களை ஓரளவேனும் ஆற்றுப்படுத்த முடியும்.
பருவ மழை ஓயாத நிலையில் வன்னியின் பெரும்பான்மையான குளங்கள் வான் பாய்வதால் இவ் இடர்நிலை தொடர வாய்ப்புள்ளது. எனவே மக்கள் பாதுகாப்பான இடங்களை தேடிக்கொள்வது மட்டுமன்றி இதன் பின்னர் ஏற்பட போகும் தொற்று நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டியதுடன் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகிறது.
இந்நிலையில் இன்றையதினம் மாங்குள குளம் உடைத்ததையடுத்து மக்கள் பல இன்னல்களுக்குள்ளாகியுள்ளனர், அதேவேளை மாங்குள மக்கள் வாழ்வாதாரத்துக்காக வளர்த்த கால்நடைகள், கோழிகள் என பல உயிர்கள் ஆங்காங்கே உயிரிழந்துள்ளமை அனைவருக்கும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-athirvu.in