அன்று விடுதலைப்புலிகளுக்கு பயந்தவர்களால்தான் இன்று பிரச்சினை: இராணுவ தளபதி

நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் தமிழிழ விடுதலைப்புலிகளுக்கு பயந்து ஒதுங்கியவர்களே வடக்கில் தமிழ் மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையும் விரிசலை ஏற்படுத்த முனைகின்றனரென இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றிலேயே மகேஸ் சேனாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“வடக்கிலுள்ள தமிழ் மக்கள் இயற்கை அனர்த்தங்களில் சிக்கும்போது, உடனடியாக அம்மக்களுக்கு வேண்டிய உதவிகளை இராணுவத்தினர் செய்து வருகின்றனர்.

ஆனால், தங்களது இத்தகைய செயற்பாடுகளின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர், எங்களது பெயருக்கு தொடர்ச்சியாக களங்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் இராணுவத்தினரை விமர்சனம் செய்கின்ற இவர்கள், வடக்கு மக்களுக்காக எதனையும் செய்ததில்லை என்பதுடன் எங்களின் பாதுகாப்பிலேயே வாழ்ந்து வருகின்றார்கள்” என மகேஸ் சேனாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

-eelamnews.co.uk

TAGS: