இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் யார்? சபாநாயகர் உத்தியோகபூர்வமாக இன்று அறிவிப்பு!

இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற சர்ச்சைக்கு சபாநாயகர் இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவை புதிய எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் இன்று கூடியபோது பிரதி சபாநாயகர் இந்த விடயத்தை சபையில் அறிவித்தார்.

வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரம்பமானது. இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான அறிவித்தல் வெளியாகி உள்ளது.

பொதுநலவாய நாடுகளின் சபாநாயர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, சபநாயகர் கரு ஜயசூரிய நேற்று மோல்டா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-eelamnews.co.uk

TAGS: