சிங்கள சொத்தாகும் மன்னார் மடு? காரணம் என்ன?

மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள மடுத்திருத்தலம் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அதன் முழு நிர்வாகியாகவும் பொறுப்புக் கூறக்கூடிய தரப்பினராகவும் தானே தொடர்ந்து செயற்படுவேன் என மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை சரியாக வருமாக இருந்தால் மாத்திரமே தாம் அதற்கு அனுமதி கொடுப்போம் என்றும் இல்லாவிட்டால் அது தேவையில்லை என்று கூறுவதற்கும் தாங்கள் தயாராக இருப்பதாக ஆயர் குறிப்பிட்டார்.

மடுத்திருத்தலத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தும் விடயம் தொடர்பில் தாம் தொடர்ந்து ஆய்வுகளையும் பரிசீலனைகளையும் மேற்கொண்டுவருவதாகவும் மைத்திபால சிறிசேனவின் புனித பிரதேசப் பிரகடனம் தொடர்பாக தாம் கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்ச்சியான கடிதத் தொடர்புகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

மடுத்திருத்தலத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தும் விடயம் தொடர்பில் தாம் தொடர்ந்து ஆய்வுகளையும் பரிசீலனைகளையும் மேற்கொண்டுவருவதாகவும் மைத்திபால சிறிசேனவின் புனித பிரதேசப் பிரகடனம் தொடர்பாக தாம் கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்ச்சியான கடிதத் தொடர்புகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பாக மன்னார் மறை மாவட்ட ஆயர் எனும் வகையில் தனது அபிப்பிரயங்களையும் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை கூறினார்.

புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மடுத்திருத்தலத்தின் மகிமைகள் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் வருடாந்த மடுமாதா ஆலயத்தின் ஆடி, ஆவணி மாத பெருவிழாக்களின் போது காலந்தோறும் பேணப்பட்டுவரும் தனித்துவ மரபுகளும் கலாசாரமும் தொடர்ந்தும் பேணப்படல் வேண்டும் என வலியுறுத்தினார்.

புனித பிரதேசமாக மடுத்திருத்தலம் பிரகடனப்படுத்தப்படும் விடயங்கள் தொடர்பான அனைத்து கலந்துரையாடல்கள் மற்றும் கூட்டங்களுக்கு மடுத்திருத்தலத்தின் பரிபாலகருக்கு அழைப்பு விடுக்கப்படல் வேண்டும் என தான் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளதாகவும் ஆயர் சுட்டிக்காட்டினார்.

கத்தோலிக்க திருச்சபையினால் 1981 ஆம் ஆண்டு மன்னார் மற்றும் வவுனியா ஆகிய இரண்டு நிர்வாக மாவட்டங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு மன்னார் மறை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

இலங்கை யாத்திரிகை தள அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 1982 ஆம் ஆண்டு அன்றைய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கே.டபிள்யூ.தேவநாயகத்தினால் மடுத் திருத்தலம் இலங்கையின் பிரசித்தி பெற்ற ஒரு யாத்திரிகை தலம் என பிரகடனப்படுத்தப்பட்டு அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் அச்சமயமே வெளியிடப்பட்டிருந்தது.

இந்த வர்த்தமானி பிரகடனத்திற்கு அமைவாக வருடாந்த பண்டிகைகளும் அரச வைபவங்கள் போல் அங்கு நடந்தேறின.

இந்நிலையில் மடுத்திருத்தலத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தப்படும் ஜனாதிபதியின் நடவடிக்கையானது முழு மடுப்பகுதியையும் அபிவிருத்தியின் உச்சநிலைக்கு எடுத்துச்செல்லும் என்பது எனது கருத்தாகும் என ஆயர் குறிப்பிட்டார்.

புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படும் மடுத்திருத்தலத்தின் பாதை, மின் விநியோகம், குடிநீர் விநியோகம், புதிய விடுதிகள் குறிப்பிர்மானம் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் அதிக அக்கறை செலுத்தும் எனும் நம்பிக்கை எனக்கு உள்ளது.

இதனடிப்படையில் இலங்கை அரசாங்கம் மடுத்திருத்தலத்தை தனது பூரண கட்டுப்பட்டிற்கு வைத்திருக்கும் நிலை ஏற்படும் என நாங்கள் கருதவில்லை எனினும் நானும் மடுப்பரிபாலகரும் ஏனைய பங்குத்தந்தையர்களும் இது தொடர்பில் தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றோம்.

ஜனாதிபதி செயலகம் மற்றும் ஏனைய அரசாங்க திணைக்களங்களுடன் நாம் தொடர்ந்தும் தொடர்பை ஏற்படுத்தியுள்ளோம் என இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை தெரிவித்தார்.

-eelamnews.co.uk

TAGS: